சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சியில் அரியக்குடி, இலுப்பைக்குடி, தளக்காவூர் ஆகிய ஊராட்சிகள் இணைக்கப்பட்டதால் அப்பகுதி வாழ் மக்களுக்கு இதுவரை இருந்து வந்த நூறுநாள் வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது..
இதனால் அப்பகுதிவாழ் மக்களின் பொருளாதாரம்தற்போது பாதிக்கப்பட்டுள்ளது..
இன்று அப்பகுதி வாழ் மக்களின் நிலையை உணர்ந்து நமது காரைக்குடி தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் அப்பகுதி மக்களுடன் இணைந்து காரைக்குடி மாநகராட்சியில் எங்கள் ஊராட்சிகளை இணைத்தாலும் எங்களுக்கு வாழ்வுக்கு ஆதாரமாக இருந்த அந்த நூறுநாள் வேலையை தொடர்ந்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை காரைக்குடி வட்டாச்சியரிடம் அளிக்கப்பட்டது..
இந்த மக்கள் நலனுக்கான பணியை நமது சிவகங்கை கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச்செயலாளர் ரஞ்சித் அவர்களும், காரைக்குடி ஜீவாநகர் பொறியாளர் கழகத் ரஞ்சித் அவர்களும், காரைக்குடி மாநகரம் சார்பில் நானும் செயற்குழு உறுப்பினர்கள் பாலா மற்றும் மாதவன் ஆகியோர் இணைந்து செய்து முடித்தார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக