பாமரர்கள் வந்து செல்லும் திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் நுழைவாயிலில் மாதக்கணக்கில் நாற்றத்துடன் கழிவுநீர் வரவேற்கிறது. கண்டுகொள்ளாத திருப்பூர் மாநகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள்
திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரியில் அரசு மருத்துவமனைக்கு தினசரி ஆயிரக்கணக்கான பொது மக்கள், நோயாளிகள் வந்து செல்லும் நுழைவு வாயிலில் தொற்று நோயை ஏற்படுத்தும் கழிவு நீர் சூழ்ந்துள்ளது. பலமுறை அதிகாரிகளிடம் கூறியும் அலட்சியமாக இருக்கும் திருப்பூர் மாநகராட்சி சுகாதார பிரிவு அலுவலர்கள் பாமரர்கள் மருத்துவத்திற்கு வந்து செல்லும் அரசு மருத்துவமனை என்பதால் என்னவோ நுழைவு வாயிலில் கழிவுநீர் வரவேற்கிறது மாதம் ஆனால் மக்கள் வரி பணத்தில் ஊதியத்தை பெற்று கொண்டு கண்டு கொள்ளாத திருப்பூர் மாநகராட்சி
சுகாதார அதிகாரிகள் இவர்களை பணிநீக்கம் செய்ய திருப்பூர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்
தமிழ்நாடு அரசு கோடிக்கணக்கான ரூபாய் போட்டு அரசு மருத்துவமனை கட்டினாலும் சுகாதாரத்தை பேணி காப்பது அரசு ஊழியர்கள் கையில் தான் உள்ளது இவ்வளவு அலட்சியமாக வேலை செய்பவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக