பனப்பாக்கம் நல்லுார்பேட்டை பகுதியில் நடந்த பள்ளி ஆண்டு விழாவில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிய நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் வடிவேலு!
ராணிப்பேட்டை , மார்ச் 23 -
ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட நல்லுார்பேட்டை தொடக்க பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர். தேன்மொழி தலைமை தாங்கினார். பட்டதாரி ஆசிரியர் முருகன் முன்னிலை வகித்தார். ஆசிரியை. இன்பவள்ளி வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ. வடிவேலு, வட்டார கல்வி அலுவலர். அரசு, சப் இன்ஸ் பெக்டர். லோகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. இதில் கலந்துகொண்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் ஒன்றிய பெருந்தலைவர் பெ. வடிவேலு அவர்கள் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றுகளை வழங்கினார். இதில் ஆசிரியைகள். ஜெயசுதா, நவநீதம், பிடிஏ துணை தலைவர் ஜனார்த்தனன், முன்னாள் தலைவர். பாஸ்கரன், கவுன்சிலர். செந்தமிழ் செல்வன் மற்றும் பெற்றோர்கள் இதில் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்ட
செய்தியாளர் மு. பிரகாசம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக