மானாமதுரை ஸ்ரீ வெங்கடேஷா இன்டர்நேஷனல் பள்ளியில் 'சேவர் தி பிளேவர்' என்ற தலைப்பில் உணவு திருவிழா வெகு நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இயங்கி வரும் தனியார் பள்ளியான ஸ்ரீ வெங்கடேஷா இன்டர்நேஷனல் பள்ளியில் "சேவர் தி பிளேவர்" என்ற தலைப்பில் உணவு திருவிழா வெகு நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக டாக்டர் திரு பவித்திர வெங்கடேஷ் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் பாரம்பரிய உணவுகளை சமைத்து அதன் முக்கியத்துவத்தையும், அழிந்து கொண்டிருக்கும் தமிழரின் உணவு பண்பாட்டையும் சிறப்பாக எடுத்துரைத்தனர். நான்கு அணிகளாக கலந்து கொண்ட இந்நிகழ்வின் இறுதியில் நம்மாழ்வார் அணியில் கலந்து கொண்ட எஸ். தருணிகா, எம். சௌமியா, பி. தமிழ் இனியன் எஸ். பூர்ணகிருத்திகா, எஸ். சாய் மித்ரன் எம். சபரிதர்ஷன் ஆகியோர் வெற்றி பெற்றனர். மேலும் சிறந்த போட்டியாளராக ஐந்தாம் வகுப்பு மாணவி எஸ். சம்யுக்தா தேர்வு செய்யப்பட்டார். இந்நிகழ்வில் பள்ளி தாளாளர் மற்றும் ஆசிரிய பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் கலந்து கொண்ட மாணவர்களுக்கும் வெற்றிக் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக