விளாத்திகுளம் மாற்றுத்திறனாளிக்கு மோட்டார் பொருத்திய இருசக்கர வாகனத்தை ஜீ.வி மார்க்கண்டேயன் எம் எல் ஏ வழங்கினார்
விளாத்திகுளம் அறிய உள்ள அய்யனார்புரம் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி .மாரிச்செல்வம் என்பவர் சுயதொழில் மேற்கொள்வதற்கு இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர் கேட்டு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வு குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜீவி மார்க்கண்டேயனிடம். கோரிக்கை மனு கொடுத்தார்
மனுவை பரிசீலனை செய்த சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மாற்றுத்திறனாளியான மாரிச் செல்வத்திற்கு உடனடியாக இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல் மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் பாண்டிராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக