சாயர்புரம் டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரி, நாட்டு நலப்பணி திட்டம் முகாம் - திருப்பணி செட்டிகுளம் குளத்தை தூர்வாரும் பணி. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 14 மார்ச், 2025

சாயர்புரம் டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரி, நாட்டு நலப்பணி திட்டம் முகாம் - திருப்பணி செட்டிகுளம் குளத்தை தூர்வாரும் பணி.

சாயர்புரம் டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரி சார்பாக திருபணி செட்டிகுளம் பஞ்சாயத்தில் உள்ள திருப்பணி செட்டிகுளம் குளத்தை தூர்வாரி சுத்தம் செய்யும் பணி நாட்டு நலப்பணி திட்டம் முகாம் சார்பில் நடைபெற்று வருகிறது.

சாயர்புரத்தில் உள்ள டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரியின் நாட்டு நல பணி திட்டம் சார்பாக திருப்பணி செட்டிகுளத்தில் நாட்டு நலப்பணி முகாம் சார்பாக திருப்பணி செட்டிகுளம் குளத்தை பல ஆண்டுகளாக மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் தூர்வாரி சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. 

இதற்கு உதவியாக நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் சார்பாக பணி செய்வதற்கு உதவியாக பொக்லின் இயந்திரம் மூலம் தூர்வார பணி நடைபெற்று வருகிறது இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் வழக்கறிஞர் கே. ரவீந்தர் சார்லஸ் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் டாக்டர் ஜே.ஜாஃபிந்த் முன்னிலை வகித்தார். 

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் மக்கள் தொடர்பு துறை தலைவர் சாந்தகுமார் பணியை தொடங்கி வைத்தார். திருப்பணி செட்டிகுளம் ஊராட்சி தலைவர் சுயம்புலிங்கம் முகாமை தொடங்கி வைத்தார். மாணவ மாணவிகள் உற்சாகமாக கலந்து கொண்டு பணியை செய்து வருகின்றனர். 

இந்த நிகழ்ச்சியை நாட்டு நல பணி திட்ட அலுவலர் மற்றும் இயந்திரவியல் துறை தலைவர் சா.டென்னிசன் செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் எஸ்தர் தங்கம், அன்டோனி மனுவேல் ராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad