உதகையில் சாலைவசதி இல்லாததால் நோயாளிகளை தொட்டில்கட்டி தூக்கி சென்ற அவலம் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 4 மார்ச், 2025

உதகையில் சாலைவசதி இல்லாததால் நோயாளிகளை தொட்டில்கட்டி தூக்கி சென்ற அவலம்

IMG-20250304-WA0301

உதகையில் சாலை வசதி இல்லாததால் மக்கள் அவதி:              உன்னத உதகையில் சாலைவசதி இல்லாததால் நோயாளிகளை தொட்டில்கட்டி தூக்கி சென்ற அவலம் 


ஆளும்கட்சி நகர மன்ற உறுப்பினரின் வார்டு என்பது தனி.சிறப்பு 


சரியான சாலை வசதி இல்லாததால் இந்த மலைகிராமங்களில் வசிக்கும் மலைவாழ் மக்கள் கர்ப்பிணிப்பெண்கள், பாம்பு கடித்தவர்கள், உடல்நிலை சரியில்லாதவர்களை மருத்துவமனைக்கு தொட்டில் கட்டி அழைத்து செல்லும் அவல நிலை பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது  என செய்திகள் பார்த்து இருப்போம் 


ஆனால் நகர பகுதியில் அதுவும் உன்னத உதகையில் நடந்தால் அதிர்ச்சிதானே 


உதகை நகராட்சிக்கு உட்பட்ட 2வது வார்டு கணபதி நகரில் தான் இந்த அவலம் சரியான சாலைவசதி இல்லாததால் நோயாளிகளை தொட்டில்கட்டி தூக்கி சென்ற பொதுமக்களின் வீடியோ வெளியாகிபல அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது அதுவும் இது திமுக நகரமன்ற உறுப்பினரின் வார்டு என்பது குறுப்பிடதக்கதாகும் தயவுசெய்து அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad