புனித ரம்ஜான் பெருவிழாவை முன்னிட்டு செய்தியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் நல திட்ட உதவி! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 28 மார்ச், 2025

புனித ரம்ஜான் பெருவிழாவை முன்னிட்டு செய்தியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் நல திட்ட உதவி!


புனித ரம்ஜான் பெருவிழாவை முன்னிட்டு செய்தியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் நல திட்ட உதவி! 

வேலூர் ,மார்ச் 28-

வேலூர் மாவட்டத்தில் புனித ரம்ஜான் பெருவிழா முன்னிட்டு செய்தியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் அரிசி, மசாலா,15 மளிகை பொருட்கள் உள்ளடங்கிய தொகுப்பு மற்றும் சேலை, லுங்கி என நலதிட்டம் வழங்கும் விழா நடைபெற்றது.வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, காட்பாடி பகுதியில் வசிக்கும் ஏழை எளிய இஸ்லாமியபெருமக்களுக்கு இனிய புனித ரம்ஜான் பெருவிழா முன்னிட்டு, தென்னிந்திய பத்திரிக்கை யாளர் சங்க, ஒருங்கிணைந்த மாவட்டத் தலைவர் டாக்டர். ராஜ்பாபு மற்றும் வேலூர் மாவட்ட துணைச் செயலாளர்கள் முஜிப் ரகுமான், ஜான்சன் ஜெயகர், டைமண்ட். கெஜராஜ் மாசிலாமணி, நிர்வாகிகள் மற்றும் முபாரக்,இஸ்மாயில், ஆகிய சமூக ஆர்வலர்கள் சார்பில் ஏழை எளிய இஸ்லாமிய சொந்தங்களுக்கு, அரிசி பிரியாணி மசாலா ஆகிய 15 பொருட்கள் உள்ளடங்கிய மளிகை பொருட்கள் மற்றும் சேலை லுங்கி என நல திட்டங்கள் வழங்கப்பட்டது. இந்த ரம்ஜான் பண்டிகைக்கு தேவையான மளிகை தொகுப்பில் தரம் வாய்ந்த அரிசி, பிரியாணி மசாலா, எண்ணெய், முந்திரி, திராட்சை, கேசரி பவுடர், மிளகாய் தூள், தனியா தூள், ஏலக்காய், பிரியாணி இலை, பட்ட இலவங்கம், , சர்க்கரை, சேமியா, ஆகிய தொகுப்புகள் மற்றும் சேலை, லுங்கி ஆகிய நல திட்டங்கள் அடங்கிய பொருட்களை ஏழை எளிய இஸ்லாமிய பெருமக்களுக்கு சுமார் 56 பேருக்கு இந்த நலத்திட்ட தொகுப்பு வழங்கப்பட்டது. இதுகுறித்து இஸ்லாமிய சொந்தங்கள் பெருமகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். புனித ரம்ஜான் நோன்பு திறப்பு முன்னிட்டு நோன்பு கஞ்சிக்காக காட்பாடி எம்.ஜி.ஆர் நகர் மசூதிக்கு ரூபாய் 3000 நன்கொடையும் வழங்கப்பட்டது. புனித ரம்ஜான் பெருவிழா இப்தார் நோன்பின் 27ஆம் நாளான இந்நன்னாளில்இஸ்லாமியர்கள் இறை தூதராக கருதும் முகமது நபிக்கு குர்ஆன் வசனம் இந்த நாளில் தான் வழங்கப்பட்டதாக வரலாறு கூறுகின்றது. இதனைத் தொடர்ந்து இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் இனிய புனித ரமலான் பெருவிழா நல்வாழ்த்துக் கள் கூறப்பட்டு நிகழ்ச்சி நிறைவுபெற்றது இந்த நலத் திட்ட விழாவிற்குஒத்துழைப்பு தந்து ஆதரவு வழங்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும், நிர்வாகத்தின் சார்பாக நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad