இளையான்குடி சிறுபாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா சிறுபாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பள்ளியில் ஆண்டு விழா பள்ளி மேலாண்மை குழுத்தலைவர் திருமதி கார்த்திகா மற்றும் திருவேங்கடம் ஊராட்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி திரு ஆல்பட் அசோக்குமார் ஆகியோரின் தலைமையிலும், இளையான்குடி திரு பஞ்சநாதன் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் வட்டார வளமையம் ஆசிரியர் பயிற்றுநர் திருமதி வனிதா ராணி மற்றும் அதிகரை ஊராட்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் ஆகியோர் வாழ்த்துரையும், சிறுபாலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் திருமதி நீலவேணி வரவேற்புரையும்,
சிறுபாலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உதவியாசிரியர் திருமதி தமிழரசி நன்றியுரை ஆற்றினர். இப்பள்ளி ஆண்டு விழாவில் பேச்சு போட்டி, விளையாட்டு போட்டி, மாறுவேடப் போட்டி, நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இவற்றில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கோட்டையூர் ஆர்.சி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் மார்ட்டின், கோட்டையூர் ஆர்.சி நடுநிலைப்பள்ளி ஆங்கில பட்டதாரி ஆசிரியர் இளங்கோ, அரணையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் இளமாறன், ஆசிரிய பெருமக்கள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் திரளாக ஈகலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக