அதி வேகமாக வந்த இருசக்கர வாகனம் மற்றொரு இரு சக்கரம் மற்றும் ஆட்டோ மீது மோதி விபத்து!
குடியாத்தம் , மார்ச் 22 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அதி
வேகமாக வந்த கேடிஎம் பைக்- இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோ மீது தொடர்ந்து மோதி விபத்து- இருசக்கர வாகனத்தில் வந்தவர் மற்றும் ஆட்டோவில் வந்த பெண் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
கேடிஎம் பைக்கில் அதிவேகமாக வந்த கல்லூரி மாணவரை பொதுமக்கள் பிடித்து போலீஸிடம் ஒப்படைப்பு
வேலூர் மாவட்டம் குடியாத்தம் -சித்தூர் சாலையில் பிச்சனூர் பேட்டை பகுதியில் கேடிஎம் பைக்கில் இரண்டு இளைஞர்கள் அதிவேகமாக வந்துள்ளனர் அப்பொழுது சாலையில் இருந்த வேகத்தடையை தாண்டும் போது கட்டுப்பாட்டை இழந்த கே டி எம் பைக், எதிரே வந்த ஸ்கூட்டி மீது மோதியது அதில் தனது பத்து வயது மகனுடன் வந்து கொண்டிருந்த கொண்ட சமுத்திரம் அம்பேத்கர் நகர்பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி அகிலன் (வயது 32) என்பவர் படுகாயம் அடைந்தார் இதனையடுத்து அதி வேகமாகச் சென்ற கேடிஎம் பைக் சாலையில் வந்து கொண்டிருந்த ஆட்டோ மீது மோதியது அதில் ஆட்டோவில் பயணம் செய்த முனாப் டிப்போ பகுதியைச் சேர்ந்த ஷாயின் ( வயது 50) என்ற பெண்மணி படுகாயம் அடைந்தார்,இதனையடுத்து அங்கு இருந்த பொதுமக்கள் உடனடியாக கேடிஎம் பைக்கில் வந்த இளைஞர்களை சுற்றி வளைத்த போது பாலமுருகன் ( வயது 21) என்பவர் தப்பி ஓடிவிட்ட நிலையில் புஷ்பராஜ் என்ற கல்லூரி மாணவரை போலீஸிடம் ஒப்படைத்தனர்,
மேலும் சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் நகர காவல் துறையினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் படுகாயம் அடைந்த அகிலன் மற்றும் ஷாயின் ஆகியோரை மீட்டு குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது,மேலும் கேடிஎம் பைக்கை ஓட்டி வந்த அரசு கல்லூரி மாணவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்த சம்பவத்தால் குடியாத்தம் சித்தூர் சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது இதனையடுத்து போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர் இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக