சபரிமலை ஐயப்பன் கோவில் நாளை நடை திறப்பு - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 31 மார்ச், 2025

சபரிமலை ஐயப்பன் கோவில் நாளை நடை திறப்பு

 

IMG-20250331-WA0208

சபரிமலை ஐயப்பன் கோவில் நாளை நடை திறப்பு:                                             


சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி ஆறாட்டு விழாவுக்காக நாளை(ஏப். 1) நடை திறப்படுகிறது.


சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர விழா, ஆராட்டு விழா, சித்திரை விஷு பண்டிகையையொட்டி கோயில் நடை தொடர்ந்து 18 நாள்கள் திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஐயப்பன் கோயில் நடை நாளை திறக்கப்படும் நிலையில், ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி விஷு கனி தரிசனம், படி பூஜைகள் நடைபெற்று, ஏப்ரல் 18 ஆம் தேதி இரவு ஹரிவராசனம் முடிந்தவுடன் நடை அடைக்கப்படும்.


பின்னர், வைகாசி மாத பூஜைக்காக மே 14 ஆம் தேதி திறக்கப்பட்டு, மே 19 ஆம் தேதி நடை அடைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


சபரிமலை ஐயப்பன் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அனைவரும் இணையதளத்தில் முன்பதிவு செய்வது அவசியம் என்று திருவிதாங்கூர் | அறிவித்துள்ளது.


முன்னதாக, மாசி மாத பூஜைக்காக பிப். 12 அன்று திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோயில் நடை பிப். 17 அன்று அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad