துங்காவியில் குடிநீர் வடிகால் வாரிய மண்டல அலுவலர் சொல்லியும் செவி கொடுத்து கேட்காத திருப்பூர் மாவட்ட குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் துங்காவி கிராமத்தில் இயங்கி வரும் குடிநீர் வடிகால் வாரிய பம்பு ஹவுஸ்சில் குடிநீர் வடிகால் வாரிய பெயர் பொறிக்கப்பட்ட அறிவிப்பு பலகை மிகவும் பாழடைந்த நிலையில் உள்ளது இது மட்டுமல்லாமல் துறை சார்ந்த அலுவலர்கள் அவர்களது தொலைபேசி எண்ணும் எழுதப்படாமல் உள்ளது அவசரத்திற்கு பொதுமக்கள் தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளது என்று இது சம்பந்தமாக இரண்டு மாதங்களுக்கு முன்பே புகார் தெரிவித்திருந்தார்கள் இது சம்பந்தமாக
குடிநீர் வடிகால் வாரிய மண்டல துறை சார்ந்த அலுவலர்
திருப்பூர் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரை செய்திருந்தார்கள். இருந்தாலும் இதுவரை தொலைபேசி எண் எழுதப்படவில்லை உடனடியாக உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் பொதுமக்களின் கோரிக்கையாகும்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக