பேராவூரணியில் வழக்கறிஞர் சங்கம் சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி
பேராவூரணி, மார்ச்.19 - தேசிய தடுப்பூசி தினத்தை முன்னிட்டு, புற்றுநோய் குறித்தும், நோய் எதிர்ப்பு சக்தியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும், பேராவூரணி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பேராவூரணி நீதிமன்ற வளாகத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது .
மாவட்ட உரிமையில் மற்றும் குற்றவியல் நீதிமன்றம், பேராவூரணி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக, புற்று நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் கிரிக்கெட் போட்டி நடத்த திட்டமிட்டு, பேராவூரணி நீதிமன்ற வளாகத்தில் முதலாம் ஆண்டு கிரிக்கெட் போட்டி நீதிபதி அழகேசன் தலைமையில், அரசு வழக்கறிஞர் பாண்டியராஜன் முன்னிலையில் நடைபெற்றது.
போட்டியில் வழக்கறிஞர்கள் ஒரு அணியாகவும், நீதிமன்ற அலுவலர்கள் ஒரு அணியாகவும் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற நீதின்ற அலுவலர்கள் அணியினருக்கு வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் சீனிவாசன், செயலாளர் சிவேதி நடராஜன் மற்றும் நிர்வாகிகள் சுழற்கோப்பையை வழங்கினர். பின்னர் நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
பேராவூரணி த.நீலகண்டன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக