நுகர்வோர் தங்களது உரிமைகளை நிலை நாட்ட, தட்டிக் கேட்ட தயக்கம் காட்டக் கூடாது என உலக நுகர்வோர் தின விழாவில் தெரிவிக்கப்பட்டது.
எம்பவர் இந்தியா நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவம் சார்பில் நடைபெற்ற உலக நுகர்வோர் தின விழாவிற்கு அமைப்பின் கௌரவ செயலாளரும், தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணையத்தின் உறுப்பினருமான ஆ. சங்கர் தலைமை வகித்தார்.
விழாவில் நிலையான வாழ்க்கை முறைக்கு நியாயமான மாற்றம் என்ற விழிப்புணர்வு பதாகையை இலவச சட்ட உதவி மையத்தின் செயலாளரும், நீதிபதியுமான கலையரசி நீனா வெளியிட்டார். அவர் பேசும் போது நுகர்வோர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் குறிப்பாக மொபைல் பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக கையாள வேண்டும் என கூறினார்.
விழாவில் என்எல்சி தலைமை பொது மேலாளர் அனந்த ராமானுஜம், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய திட்ட இயக்குனர் சிவன் சர்மா, புனித மரியன்னை கல்லூரி செயலாளர் அருட்சகோதரி இபானா ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
நல்லூரி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் ரதி நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக