தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக 'ஒன்றிணைவோம் சமத்துவம் காண்போம்' என்ற கல்லூரி மாணவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

செவ்வாய், 25 மார்ச், 2025

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக 'ஒன்றிணைவோம் சமத்துவம் காண்போம்' என்ற கல்லூரி மாணவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக 'ஒன்றிணைவோம் சமத்துவம் காண்போம்' என்ற  கல்லூரி மாணவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை, சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக 'ஒன்றிணைவோம் சமத்துவம் காண்போம்' என்ற தலைப்பில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (25.03.2025) ஸ்ரீவைகுண்டம், பத்மநாபமங்கலம் பகுதியில் உள்ள ஸ்ரீ குமரகுருபரர் சுவாமி கலை கல்லூரியில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து சமூக ஒற்றுமை, பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்டவை குறித்து கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் ஆறுமுகம்,  தீபு, தூத்துக்குடி மாவட்ட கூடுதல் ஆட்சியர் பென்னடிக் ஆசீர், வருவாய் கோட்ட அலுவலர் பிரபு, சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ஜமால், ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் மற்றும் காவல் ஆய்வாளர் உட்பட காவல்துறையினர் மற்றும் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் கலை கல்லூரி முதல்வர் திரு. விஜயகுமார் உட்பட கல்லூரி மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad