தூத்துக்குடி - அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் நடைமுறைகள் தொடர்பான கலந்தாய்வு கூட்டம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 20 மார்ச், 2025

தூத்துக்குடி - அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் நடைமுறைகள் தொடர்பான கலந்தாய்வு கூட்டம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் நடைமுறைகள் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையமானது அனைத்து தேர்தல் அலுவலர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் தேர்தல் நடைமுறைகள் தொடர்பாக சட்டப்படியான நடைமுறைகளுக்குட்பட்ட கூட்டங்கள் நடத்திட அறிவுறுத்தப்பட்டது. 

அதன் அடிப்படையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் நடைமுறைகள் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் 18.03.2025 அன்று காலை 10.30 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மேற்படி கலந்தாய்வு கூட்டத்தில் வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள்/ வட்டாட்சியர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர். 

மேற்படி கலந்தாய்வு கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரின் தெரிவித்த கோரிக்கைகள் சம்மந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களால் உடனுக்குடன் தீர்வு காணப்படும் என்றும், இக்கோரிக்கைகள் தொகுக்கப்பட்டு, சென்னை தலைமை தேர்தல் அலுவலருக்கு சமர்ப்பிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad