நெல்லை, 08 மார்ச் 25- ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் இரண்டாவது வாரம்உலகம் முழுவதும் கண் மருத்துவ துறையினரால் உலக கண் நீர் அழுத்த நோய்விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்படுகிறது.
இவ்வருடமும் மார்ச் மாதம் 09 தேதிமுதல் 15 தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிகழ்வை முன்னிட்டுதிருநெல்வேலி டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பாக பொதுமக்கள் மத்தியில விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு மனிதசங்கிலி வண்ணார்பேட்டை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை முன்னர் நடைபெற்றது.
இதனை திருநெல்வேலி மாநகரம் காவல்துறை துணை ஆணையாளர் (கிழக்கு) திரு V. வினோத் சந்தரம் Msc ,MBA அவர்கள் சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார் .இந்திய மருத்துவ சங்கதிருநெல்வேலி கிளை நிர்வாகிகள் தலைவர் இந்திய மருத்துவ சங்கம் டாக்டர் M.முகம்மது அபூபக்கர் , டாக்டர் M. பிரபுராஜ் செயலாளர் இந்திய மருத்துவ சங்கம் திருநெல்வேலி, டாக்டர் K. கண்ணன் பொருளாளர், இந்திய மருத்துவ சங்கம் திருநெல்வேலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்
திருநெல்வேலி டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் மண்டல மருத்துவ இயக்குனர் பேராசிரியர் டாக்டர் டே. லயனல்ராஜ் அவர்கள் கண்நீர் அழுத்தத்தால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விரிவாக பேசினார்.
மனித சங்கிலியில் தமிழ்நாடு கால்நடை துறை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் திருநெல்வேலி, திருநெல்வேலி டாக்டர் அகர்வால் ஆப்டோமெட்டிரி கல்லூரி, சாராள் தக்கர் பெண்கள் கல்லூரி பாளையங்கோட்டை,அன்னை காஜிரா பெண்கள் கல்லூரி மேலப்பாளையம், நேரு நர்சிங் கல்லூரி வள்ளியூர், நேசம் சுகாதார அறிவியல் கல்லூரிதிருநெல்வேலி, ரோஸ் மேரி பெண்கள்கல்லூரிதிருநெல்வேலி, ஸ்ரீ சாரதா பெண்கள் கல்லூரி திருநெல்வேலி,
AR செவிலியர் கல்லூரி கடயம் , மாணவ மாணவியர்கள் மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும் விழிப்புணர்வு வாசகங்களை கூறியும் மனித சங்கிலியில் பங்கேற்றனர்.
உலக கண்ணீர் அழுத்த நோய் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு 09.03.2025 தேதி முதல் 15.03.2025 தேதி வரை 40 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கண்நீர் அழுத்த நோய் பரிசோதனை செய்யப்படுகிறது.
இதற்கான சிறப்புப் பிரிவை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை முதல் தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சி ஏற்பாட்டினைமருத்துவமனை கண்நீர் அழுத்த பிரிவு மருத்துவர் பெட்சி கிளமெண்ட் அவர்கள் மற்றும் ,மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக