ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சார்பாக இன்று புதிய மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் ! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 10 மார்ச், 2025

ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சார்பாக இன்று புதிய மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் !


திருப்பத்தூர், மார்ச் 10 -

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த பெரிய கண்ணால பட்டி ஊராட்சி சேர்ந்த ராஜாவூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இன்றுபுதியதாக மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது .இந்த ஊர்வலத்தில் மாணவர்களும் உதவி ஆசிரியர் தலைமை ஆசிரியர் நல்லாசிரியர் என்று அவர்களும் ஊர் பொதுமக்களும் கலந்துகொண்டு மாணவர்களை அரசு பள்ளியில் சேர்ப்போம் பயனடைவோம் என்ற பதாகைகள் மற்றும் பேனர்கள் வைத்தும் அந்தந்த குடியிருப்பு பகுதிகளில் ஊர்வலமாக சென்றனர் இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கவுன்சிலர்  சுப்பிரமணிகலந்து கொண்டார் இந்த ஊர்வலமானது தலைமை நல் ஆசிரியர். இந்திரா தலைமையில் நடைபெற்றது.இந்த ஊர்வலத்தில் அரசால் வழங்கப்படும் நலத்திட்டங்கள் அனைத்தையும் மாணவர்களும் ஆசிரியர்களும் கோஷமிட்டு ஊர்வலமாக வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த ஊர்வலத்தை மாணவர்கள் அனைவரும் பாட்டு பாடியும் நடனமாடியும் சிறப்பாக ஊர்வலம் நடத்தப்பட்டது.

திருப்பத்தூர் தாலுகா செய்தியாளர் அண்ணாமலை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad