உளுந்தூர்பேட்டை தொகுதி திருநாவலூர் பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கமிட்டி மாநாடுகள் நடைபெற்றது
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை திருநாவலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி -மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (விடுதலை) கட்சி சார்பில் பகுதி கமிட்டி (ஒன்றியக்) கமிட்டி மாநாடுகள் நடைபெற்றது உளுந்தூர் பேட்டை மாநாட்டில் 10 பெண்கள் உட்பட 35 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் வேலை அறிக்கை, வேலைத்திட்டத்தின் மீது 10க்கு மேற்பட்ட பிரதிநிதிகள் பேசினர் தோழர் ஆறுமுகம் தொகுத்து பேசினார் அறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது 11பேர் கொண்ட பகுதிக் கமிட்டியும் கமிட்டியின் செயலாளராக ஆறுமுகமும் தேர்ந்தெடுக்கப்பட்டனர் திருநாவலூர் பகுதி மாநாட்டில் 16 பெண்கள் உட்பட 45 பேர் பேர் கலந்து கொண்டனர் வேலை அறிக்கை, வேலைத் திட்டத்தின் மீது தொகுத்து வல்லமநாதன் பேசியபின் அறிக்கையை மாநாடு ஏற்றுக்கொண்டது. 15 பேர் கொண்ட கமிட்டி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டது செயலாளராக தோழர் வல்லமநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டார் மாவட்டச் செயலாளரை வாழ்த்தி மாவட்டச் செயலாளர் கலியமூர்த்தி, மாநிலக் கமிட்டி உறுப்பினர்கள் சி. ராஜசங்கர், பாலசுந்தரம் வாழ்த்திப் பேசினார்கள் மாநிலக் கட்சி வளர்ச்சி நிதியாக ரூ 10000/ வழங்கினர். மே 1 அன்று பெருந்திரள் அணிதிரட்டல் நடத்துவதென்று மாநாடுகள் முடிவுசெய்தன
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட ஒளிப்பதிவாளர் விஜயகாந்த் தமிழக குரல் இளையதள செய்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக