மணப்பாடு பகுதியில் - கடல் வாழ் உயிரி ஆமை குஞ்சுகள் வளர்ப்பு. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வெள்ளி, 28 மார்ச், 2025

மணப்பாடு பகுதியில் - கடல் வாழ் உயிரி ஆமை குஞ்சுகள் வளர்ப்பு.

மணப்பாடு பகுதியில் - கடல் வாழ் உயிரி ஆமை குஞ்சுகள் வளர்ப்பு. 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் மணப்பாடு கடற்கரைப் பகுதியில் இன்று (28.03.2025) காலை, வனத்துறை சார்பில், புதிதாக பிறந்துள்ள ஆமைக் குஞ்சுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் கடலில்  விட்டார்கள். 

பின்னர் மணப்பாடு கடற்கரைப் பகுதியில் வனத்துறை சார்பில் சேகரிக்கப்பட்ட ஆமை முட்டைகளை பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வரும் குஞ்சு பொரிப்பகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) 
இரா.ஐஸ்வர்யா, மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமன், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் சுகுமாறன் உட்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad