திருப்பத்தூர் ,மார்ச் 7-
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் வெயிலின் தாக்கத்தின் காரணமாக பதிய பேருந்து நிலையம் எதிரில்
நகர இளைஞரணி துணை அமைப்பாளர் ஐயப்பன் ஏற்பாட்டில் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எவ.வேலு நீர் மோர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.மேலும் பொது மக்களுக்கு வாழைப் பழம்,பப்பாளி, தர்பூசணி, தயிர், மோர், இளநீர்,ஜூஸ் மற்றும் பல வகைகள் வழங்கினர்.
மேலும் இந்த நிகழ்வில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்டச் செயலாளர் கா தேவராஜ். நாடாளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை. திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, திருப்பத்தூர் நகர செயலாளர் ராஜேந்திரன், டி ரகுநாத். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வடிவேல்.ரமணன். கோபி. மருது. கமல் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர் தாலுகா செய்தியாளர் அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக