கூடலூர் பந்தலூர் சாலையில் இருசக்கர வாகன விபத்து
கூடலூர் - பந்தலூர் சாலையில், ஜானகியம்மாள் திருமண அரங்கம் அருகில் இருசக்கர வாகனத்தில் இரு இளைஞர்கள் பயணத்தபோது, எதிர்பாராத விதமாக தடுப்பு சுவரில் மோதி கீழே விழுந்தனர்.ஒரு இளைஞருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டிருக்கிறது. தலைக்கவசம் அணிந்திருந்ததால் வேறு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.பொதுமக்கள் உடனடியாக அந்த இளைஞரை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நல் வாய்ப்பாக ஒரு இளைஞருக்கு எந்த பாதிப்புமில்லை. இருசக்கர வாகனத்தின் முகப்பு விளக்கு,கண்ணாடி மற்றும் பதிவெண் பலகை மட்டும் சேதமடைந்துள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக