நா த க சார்பாக சில்லஹல்லா திட்டத்தை கைவிடக் கோரி ஆர்ப்பாட்டம்
நாம் தமிழர் கட்சி சார்பாக சில்லஹல்லா நீரேற்று புனல் மின் திட்டத்தை கைவிடக் கோரியும் பாண்டியர் புன்னம்புழா அணைத்திட்டத்தை நிறைவேற்றக் கோரியும் ஞாயிற்றுக்கிழமை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
நீலகிரி மாவட்டம் உதகை ஏடிசி பகுதியில் பிற்பகல் ஒரு மணி அளவில் நாம் தமிழர் கட்சி சார்பாக சில்லஹல்லா நீரேற்று புனல் மின் திட்டத்தை கைவிட கோரியும் பாண்டியார் புன்னம்புழா அணைத்திட்டத்தை நிறைவேற்ற கோரியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் இந்த திட்டத்தில் அவர்கள் கூறியதாவது. நீலகிரி மலை மாவட்டத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பல புனல் மின்சார திட்டங்களால் மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கும் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்படும். இந்தத் திட்டம் ரூபாய் 5843 கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டுள்ளன மொத்தம் 310.157 ஹெக்டர் நிலம் கையகப்படுத்தவும் இதில் பெரும்பாலும் வனப்பகுதியும் மக்கள் குடியிருப்புகளும் வேளாண் நிலங்களும் அடங்கியுள்ளது இத்திட்டத்தால் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு பாதிப்புக்கு உள்ளாகும். இதில் பா ஆகும் கிராமங்கள் மேல்குந்தா கீழ்குந்தா அவலாஞ்சி ஸ்ரீராம் நகர் பெம்பட்டி என்ற நீலகிரியில் 283 இடங்கள் நிலச்சரிவு அபாயம் நிறைந்த பகுதிகளில் இந்தப் பகுதிகளும் அதில் அடங்கும். இந்தத் திட்டத்தை அமல்படுத்தும் வகையில் வயநாட்டில் நடந்த பேரழிவு மாதிரி நீலகிரியில் இம்மாதையான சுற்றுச்சூழல் சமநிலையை சிதைக்கும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர் மின் உற்பத்திக்கான மாற்று வழிகள் பல்வேறு இருக்கும் சூழலில் இயற்கைக்கு எதிரான திட்டம் ஏற்புடையதல்ல எனவும். ஆகையால் தமிழ்நாடு அரசும் ஒன்றிய அரசும் சில்ஹல்லா புனல் மின் நீரேற்று திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் மற்றும் அதற்கு மாற்றாக பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள கூடலூர் பாண்டியார் புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்தி கோரிக்கை வைத்தனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார் அவர்களுடன் மேற்கு மாவட்ட தலைவர் ரகுபதி மேற்கு மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் மாநில ஒருங்கிணைப்பாளர் பொன் மோகன் தாஸ் மற்றும் தொழில்நுட்ப பாசறை மாநில இணைச்செயலாளர் கார்த்திக் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் வினிட்டா மேரி மாணவர் பாசறை தமிழ்வாணன் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சந்திரமோகன் மற்றும் கட்சி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக