பெ. வடிவேலு தலைமையில் நெமிலியில் நடைபெற்ற அரக்கோணம் தொகுதி பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்! - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

புதன், 26 மார்ச், 2025

பெ. வடிவேலு தலைமையில் நெமிலியில் நடைபெற்ற அரக்கோணம் தொகுதி பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்!

பெ. வடிவேலு தலைமையில் நெமிலியில் நடைபெற்ற அரக்கோணம் தொகுதி பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்!
ராணிப்பேட்டை , மார்ச் 26 -

ராணிப்பேட்டை   மாவட்டம், அரக்கோணம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட , நெமிலி கிழக்கு ஒன்றியம் மற்றும் அரக்கோணம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில், நெமிலி பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பூத் கமிட்டி முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு நெமிலி ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான பெ. வடிவேலு தலைமை வகித்தார். அரக்கோணம் மேற்கு ஒன்றிய செயலாளர். சவுந்தர் முன்னிலை வகித்தார். மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் பவானி வடிவேலு வரவேற்றார். 

இதில் சிறப்பு அழைப்பாளராக அரக்கோணம் தொகுதி தேர்தல் பொறுப்பாளர். உதயசூரியன் அவர்கள் கலந்து கொண்டு,
பூத் கமிட்டி நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து சமூக ஊடகங்களில் சிறப்பாக செயல்பட வேண்டும். மேலும் கிராமங்கள் தோறும் பொதுமக்களை நேரில் சந்தித்து திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூற வேண்டும் என்று விளக்கிப் பேசினார். இதில் தலைமை செயற்குழு உறுப்பினர். கண்னையன், மாவட்ட துணை செயலாளர். துரை மஸ்தான், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர். வடகண்டிகை பாபு உள்ளிட்ட திமுக கழக நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்ட 
செய்தியாளர் மு. பிரகாசம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad