குடி, போதை மறுவாழ்வு மையத்தின் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 31 மார்ச், 2025

குடி, போதை மறுவாழ்வு மையத்தின் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்!

குடி, போதை மறுவாழ்வு மையத்தின் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்!

குடியாத்தம் மார்ச் 31 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் போதைப் பொருளால் சீரழிவோரை மீட்கும் பணியில் ஈடுபட்டுவருவோரை மீட்கும் பணியை மேற்கொள்ளும் நியூ லைப் ஹவுஸ் டிரஸ்ட் பாராட்டுகிறேன் என்று பாமக முன்னாள் மாவட்ட செயலாளர் வக்கீல் என்.குமார் கூறினார். குடியாத்தம் தி ஐ புண்டேஷன் கண் மருத்துவ மனையும் நியூ லைப் ஹவுஸ் டிரஸ்ட் மையம் சார்பில் இயங்கும் மன நல காப்பகமும் இணைந்தபு கொண்ட சமுத்திரம் ஊராட்சியில் உள்ள வாரியார் நகர் சக்தி நகரில் உள்ள டிரஸ்ட் அலுவலகத்தில் 3132025-அன்று நடைபெற்றது முகாமுக்கு டிரஸ்ட் பொருளாளர் கே.எம்.இ.கருணாகரன் தலைமை தாங்கினார். டிரஸ்ட் நிர்வாக இயக்குநர் கே.கே.சிவசண்முகம் வரவேற்றார்  முகாமை தொடங்கிவைத்து வக்கீல் குமார் பேசியதாவது இன்று மக்களில் பெருமளவு போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகிவிட்டனர். தமிழ்நாட்டில் விதவைகள் எண்ணிக்கை அதிகமாகிவருகிறது. இந்த நிலை மாற வேண்டும். பெண்கள் தங்களது குடும்பத்தினர் குடிபழக்கத்தில் இருந்து மீட்க அவர்களோடு அன்போடு பழக வேண்டும். அன்பினால் சாதிக்கலாம். மது, புகையிலை, குட்கா என்று பல்வேறு வகைகளால் போதைப் பொருள்கள் இருக்கின்றன. கல்வி நிலையங்களின் அருகே கூல் லிப் எனப்படும் போதை சாக்லெட்டுகளுக்கு மாணவர்கள் அடிமையாகியுள்ளனர். இதற்கு தேவை மாணவர்களை பெற்றோர் கண்காணிக்க வேண்டும். போதைக்கு அடிமையானவர் களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள நியூ லைப் ஹவுஸ் டிரஸ்ட் நிர்வாகத்தினரை பாராட்டுகிறேன் மருத்துவத் துறையில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த சேவையாற்றிய கருணாகரன் அவர்கள் தனது மகன் சிவசண்முகத்தை சேவை பணிக்கு அனுப்பியது பெருமையாக இருக்கிறது. இவ்வாறு குமார் மற்றும் 
 நிகழ்ச்சியில் புதிய நீதிக் கட்சியின் நகர செயலாளர் கைத்தறிக் காவலன் எஸ் ரமேஷ் தெரிவித்தனர் 

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad