மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளியில் 'திறனாய்வு திறன்' மற்றும் 'மாறுவேடம் போட்டி - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 23 மார்ச், 2025

மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளியில் 'திறனாய்வு திறன்' மற்றும் 'மாறுவேடம் போட்டி

IMG-20250323-WA0541

மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளியில் 'திறனாய்வு திறன்' மற்றும் 'மாறுவேடம் போட்டி' மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளியில் 'திறனாய்வு திறன்' மற்றும் 'மாறுவேடம் போட்டி' மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் மாணவ, மாணவிகள் புதுப் புது மாறுவேடங்கள் அணிந்து அதுகுறித்து பேசினார்கள். மேலும் இப்போட்டிகளில் சிறப்பாக வேடம் அணிந்து சிறப்பாக பேசிய முதல் மூன்று மாணவர்களுக்கு வெற்றிக் கோப்பைகள், சான்றிதழ்கள், பரிசுகள் மற்றும் பங்குப் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.


இவ்வினிய நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக பள்ளியின் நிறுவனர் திருமதி பி. இராஜேஸ்வரி, பள்ளியின் தாளாளர் திரு ஆர். கபிலன், பள்ளி நிர்வாகி திருமதி ஆர். மீனாட்சி மற்றும் பள்ளியின் முதல்வர் திருமதி எம். சாரதா ஆகியோர் கலந்து கொண்டனர். அவ்விழாவினைத் தொடர்ந்து பாபா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியின் 46-வது ஆண்டு விழா மிகச்சிறப்பான முறையில் நடைபெற்றது. 


இதில் தலைமை விருந்தினர்களாக பள்ளியின் நிறுவனர் திருமதி பி. இராஜேஸ்வரி, மானாமதுரை வட்டாட்சியர் திரு ஆர். கிருஷ்ணகுமார், மானாமதுரை காவல் ஆய்வாளர் திரு ஜி. எஸ். ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக மானாமதுரை போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு ஏ. வெங்கடேஸ்வரன், தீயணைப்புத்துறை எ.ரமேஷ், திரு மருத்துவர் சி. கண்ணன், கல்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு எஸ். ஆரோக்கியராஜா, தலைமை தபால் நிலையம் போஸ்ட் மாஸ்டர் திருமதி எஸ். தர்மாம்பாள் மற்றும் திருமதி மருத்துவர் எஸ். கயல்விழி இந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர். 


மேலும் நடப்பு கல்வியாண்டு முழுவதிலும் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவர்களுக்கும், வருகையில் முதல் இடங்களை பிடித்த மாணவர்களுக்கும், யோகா, கராத்தே, சிலம்பம், ஓவியம், விளையாட்டு போன்றவற்றில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.


அதனைத் தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேறியது. சிறப்பு விருந்தினர்களுக்கு பள்ளியின் தாளாளர் கபிலன் அவர்கள் பொன்னாடை அணிவித்து கெளரவப்படுத்தினார். பள்ளியின் நிர்வாகி மீனாட்சி அவர்கள் நினைவு பரிசு வழங்கினார். இவ்விழாவிற்க்கான முன்னேற்பாடுகளை பள்ளியின் முதல்வர் சாரதா மற்றும் பள்ளியின் பொறுப்பாளர் பாண்டியம்மாள் மற்றும் ஆசிரியர்கள் மேற்கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad