நீர் மோர் பந்தலை அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 22 மார்ச், 2025

நீர் மோர் பந்தலை அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

IMG-20250322-WA0285

தாராபுரம் நகராட்சி சார்பில் 

அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.


திருப்பூர் மாவட்டம் தாராபுரம்:தமிழகத்தில் வெயில் வாட்டி  வதைத்து வருவதையடுத்து பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் நீர்மோர் பந்தல் திறக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திமுக-வினருக்கு உத்தரவிட்டார்.


 

அதன் ஒரு பகுதியாக  தாராபுரம் பஸ் நிலையத்தில் இன்று தாராபுரம் நகராட்சி சார்பில் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டது. அதன் தொடக்க விழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தாராபுரம் நகர்மன்ற தலைவர் கே.என்.பாப்பு கண்ணன் தலைமை தாங்கினார். தமிழக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் ரிப்பன் வெட்டி நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர்,  தர்பூசணி, வெள்ளரிக்காய் உள்ளிட்டவற்றை வழங்கினர். 


இதில் தாராபுரம் நகரக் கழக செயலாளர் முருகானந்தம் ,ஒன்றிய கழகச் செயலாளர் எஸ் வி செந்தில் குமார், நகரக் கழக துணைச் செயலாளர் கமலக்கண்ணன்,மருத்துவ அணியை சேர்ந்த மருத்துவர் இந்திராணி, நகராட்சி ஆணையாளர் திருமால்செல்வம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 




.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad