ஈரோடு வ.உ. சி. பூங்கா மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு சில்லறை மற்றும் மொத்த வியாபாரம் நடைபெற்று வருகிறது. தாளவாடி, திருப்பூர், ஒட்டன்சத்திரம், பெங்களூர், ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. தற்போது கோவில்களில் விழாகள் மற்றும் சுப முகூர்த்தங்கள் தொடர்ந்து வருவதால் காய்கறிகளின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் ஒவ்வொரு நாளும் காய்கறிகள் விலை கூடுவதும், குறைவதும் என நிலையற்ற தன்மையுடன் இருந்து வருகிறது.
இந்நிலையில் வ. உ. சி. மார்க்கெட்டிற்கு வழக்கத்தை விட காய்கறிகள் வரத்து குறைந்து காணப்பட்டது. இதன் எதிரொலியாக கடந்த வாரத்தை விட நாட்டு காய்கறிகள் விலை உயர்ந்து விற்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் 30 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ கத்திரிக்காய் இன்று ரூ. 50-க்கு விற்பனையானது. கடந்த வாரம் கருப்பு அவரை ஒரு கிலோ ரூ. 100-க்கு விற்பனையான நிலையில் இன்று ஒரு கிலோ ரூ. 120 ஆக உயர்ந்து விற்பனையானது. நாட்டு காய்கறிகள் கடந்த வாரத்தை விட விலை உயர்ந்து விற்பனையானது. இதேபோல் கடந்த வாரம் 60 ரூபாய்க்கு விற்கப்பட்ட பீன்ஸ் ஒரு கிலோ ரூ. 100 ஆக உயர்ந்து விற்பனையானது.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக