விருந்தினா் மாளிகையை கோவை சரக காவல் துறை துணைத் தலைவா் சசிமோகன் திறந்து வைத்தாா். - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வியாழன், 13 மார்ச், 2025

விருந்தினா் மாளிகையை கோவை சரக காவல் துறை துணைத் தலைவா் சசிமோகன் திறந்து வைத்தாா்.

 

IMG-20250313-WA0229

உதகையில் புதுபிக்கப்பட்ட காவல் துறை  விருந்தினா்  மாளிகையை  கோவை சரக  காவல் துறை துணைத் தலைவா் சசிமோகன் திறந்து வைத்தாா்.


உதகை ஜெயில் ஹில் பகுதியில்  உள்ள காவல் துறை  விருந்தினா்  மாளிகையைப் புதுப்பிக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. பணிகள் நிறைவுற்ற நிலையில், புதுப்பிக்கப்பட்ட விருந்தினா் மாளிகையை கோவை சரக காவல் துறை துணைத் தலைவா் சசிமோகன் திறந்துவைத்தாா்.பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில் ஊட்டிக்கு கோடை சீசனில் சுற்றுலா பயணியர் அதிகளவில் வருகை தருகின்றனர். கோடை சீசன், மலர் கண்காட்சியின் போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஆய்வு செய்து வருகிறோம். போக்குவரத்து மாற்றங்கள் குறித்தும், சுற்றுலா பயணியருக்கு எந்த வித குற்ற சம்பவங்கள் நடக்காமல் பாதுகாப்பான முறையில் வந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஊட்டி நகரில் தற்போதுள்ள சி.சி.டி.வி., கேமராக்களின் எண்ணிக்கை போலீசார் சார்பில் அதிகரிக்கப்படும்.சுற்றுலா பயணியர் வாகனங்களை நிறுத்தும் பார்க்கிங் இடங்கள் மற்றும் குற்ற சம்பவங்களுக்கு வாய்ப்புள்ள இடங்களில் கூடுதலாக சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்படும்.ஊட்டியில் உள்ள பொதுமக்கள் தங்களது குடியிருப்புகளில் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தி இருந்தால், அதில் ஒரு சி.சி.டி.வி., கேமராவை மக்கள் நடமாட கூடிய பகுதிகளை நோக்கி வைக்க வேண்டும். அவ்வாறு வைக்கும் போது குற்ற சம்பவங்களை எளிதில் தடுக்க முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ் நிஷா உள்ளிட்ட  பலா் கலந்துக்கொண்டனா். 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட புகைப்பட கலைஞர் என் வினோத் குமார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad