கார் கண்ணாடி உடைப்பு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு.
நாகர்கோவில் இருளப்பபுரம் வி.என். காலனியை சேர்ந்தவர் நடராஜன் என்ற நவீன்(வயது 36). இவர் அகில பாரத இந்து மகா சபா கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளராக உள்ளார்.
இவர் நேற்று முன்தினம் இரவு தனது காரை வீட்டின் முன் நிறுத்திவிட்டுதூங்கசென்றார். பின்னர், நேற்று காலை எழுந்து பார்த்தபோது, காரின் முன்புற கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நவீன் இதுகுறித்து கோட்டார் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆனால் கார் கண்ணாடியை உடைந்த மர்ம நபர்கள் யார்?, எதற்காக கண்ணாடியை உடைத்தனர்? என்பது தெரிய வில்லை. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், என்.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக