உதகை பகுதியில் மின்னொழியில் நடைபெற்ற ஆண்களுக்கான கால்பந்தாட்ட இறுதிப்போட்டி. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

திங்கள், 17 மார்ச், 2025

உதகை பகுதியில் மின்னொழியில் நடைபெற்ற ஆண்களுக்கான கால்பந்தாட்ட இறுதிப்போட்டி.

IMG-20250317-WA0004

 உதகை  பகுதியில் மின்னொழியில் நடைபெற்ற ஆண்களுக்கான கால்பந்தாட்ட  இறுதிப்போட்டி.            


நீலகிரி மாவட்டம் உதகை காந்தல் பகுதியில் அமைந்துள்ள காந்தல் கால் பந்தாட்ட அகடாமியின் எட்டாம் ஆண்டு கால்பந்தாட்ட திருவிழா இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது இதில் சென்னையைச் சேர்ந்த பச்சையப்பா அணியும் திருச்சியை சேர்ந்த டப் 45 என்ற அணியும் மோதியது இப் போட்டியை உதகை நகர மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு சத்தியசீலன் அவர்கள் தொடங்கி வைத்தார் இப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த பச்சையப்பா அணி வெற்றி பெற்றது வெற்றி பெற்றவர்களுக்கு காவல் ஆய்வாளர் அவர்கள் வெற்றிக் கோப்பையை வழங்கினார் தற்போதும் ஆய்வாளர் அவர்கள் கால்பந்தாட்ட வீரர் என்பதை அறிந்த அனைவரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குளிரையும் பொருட்படுத்தாமல் கால் பந்தாட்ட இறுதிப் போட்டியினை கண்டு மகிழ்ந்தனர் 


நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திக்காக செய்தியாளர் ஸ்ரீநிவாசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad