யானை தாக்கி ஒருவர் உயிரிழைப்பு - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

செவ்வாய், 11 மார்ச், 2025

யானை தாக்கி ஒருவர் உயிரிழைப்பு

IMG-20250311-WA0200

 யானை தாக்கி ஒருவர் உயிரிழைப்பு:          

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஆடர்லி சேம்பக்கரை பகுதியில் வசித்து வரும் குரும்பர் இனத்தைச் சேர்ந்த திரு விஜயகுமார் வயது 33, நேற்று 9.3.2025 இரவு சுமார் 8.45 மணி அளவில் ஆர்டர்லி பேருந்தில் இருந்து இறங்கி வீட்டிற்கு நடந்து செல்லும் வழியில் யானையால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். 


இச்செய்தி அறிந்த அரசு தலைமை கெராடா இளித்தொரை ராமச்சந்திரன் அவர்கள்  இன்று குன்னூர் லாலி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று இறந்தவரின் உடலுக்கு மரியாதை செலுத்தி, இறந்தவரின் குடும்பத்திற்கு தமிழக முதலமைச்சர் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தோம்.


மேலும் குன்னூர் லாலி அரசு மருத்துவமனையில் இறந்தவரின் உடற்கூறு ஆய்வு முடியும் வரை பிணவரையின் அருகில் அமர்ந்து, உடற்கூறு ஆய்வு முடிந்த பிறகு பூத உடலை பெற்று சேம்பக்கரை கிராம மக்களிடம் ஒப்படைத்து,


தமிழக அரசின் சார்பில்  தற்போது நடைபெற்று வரும் திராவிட மாடல் ஆட்சியில் வன விலங்குகளால் தாக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படுகிறது.


இன்று இறுதி சடங்கிற்கு முன்பணமாக ரூபாய் 50 ஆயிரத்திற்கான தொகையினை வனத்துறை அதிகாரிகள் முன்னிலையில் இறந்தவர் குடும்பத்தினருக்கு வழங்கி மீதித் தொகையினை விசாரணை முடிந்த பிறகு வழங்கப்படும் என தெரிவித்து


வனத்துறை அதிகாரிகளிடம் இறந்தவரின் உடலை பாதுகாப்பாக அவரது கிராமத்திற்கு எடுத்துச்சென்று  இறுதி சடங்குகள் முடியும் வரையில்  இருந்து திரும்புவார்கள் என கூறினார் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad