தூத்துக்குடி மாவட்டத்தில், ஏரல் மூன்றாவது மிகப்பெரிய வணிக நகரமாக உள்ளது. எனவே ஏரல் பேருந்து நிறுத்தத்திற்கு ஏராளமான பேருந்துகள் வந்து செல்வதால் அதிக அளவில் பயணிகள் ஏரல் நகரை கடந்து தான் பயணம் செய்கின்றனர்.
இந்த ஏரல் நகரை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளது கிராம மக்கள் வீட்டில் தேவையான பொருட்களை வாங்கவும் வேலைக்கு செல்லும் பெண்கள் பொதுமக்கள் ஏரலை அதிகம் சார்ந்து உள்ளனர். இந்த நிலையில் ஏரல் பேருந்து நிலையத்தில் உள்ள கட்டிடங்களை இடித்து விட்டு புதிதாக கட்டுவதற்கு பேரூராட்சி தீர்மானம் நிறைவேற்றி கட்டிடங்களை இடித்து விட்டனர்.
அதனால் பெண்களுக்கும் பயணிகளுக்கும் உபயோகமாக, நல்ல நிலையில் இருந்து வந்த உள்ள கழிப்பிடத்தையும் சேர்த்து இடித்து விட்டனர். இதனால் ஏரல் பேருந்து நிலையத்தில் கழிப்பிட வசதி இல்லாமல் பெண்கள், பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகின்றனர்.
எனவே எவ்வித மாற்று ஏற்பாடும் செய்யாமல் நல்ல நிலையில் இருந்த கழிப்பறையை அகற்றி உள்ளனர். இதை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டனம் எழுந்துள்ளது. உடனடியாக தற்காலிகமாக பயணிகள் நிழற்கூடம், கழிப்பிட வசதி மற்றும் குடிநீர் வசதி தரவேண்டும். இல்லையென்றால், மாவட்ட தலைவர் சித்ராங்கதன் உத்தரவின் பெயரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை முன்னாள் ஏரல் ஒன்றிய தலைவர் ராஜகோபால் தெரிவித்துள்ளார்.
செய்தி - சேதுபதி ராஜா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக