நாசரேத் மார்ச் 9, நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் மன்றத்தின் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தலைமையாசிரியர் குணசீலராஜ் தலைமை தாங்கினார்.உதவி தலைமையாசிரியர் சார்லஸ் திரவியம் முன்னிலை வகித்தார். ஆசிரியர் தனபால் ஆரம்ப ஜெபம் செய்தார்.
ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் வரவேற்றார். ஆசிரியை ஜெயந்தி சுபாஷினி, தேசிய அறிவியல் தினம் குறித்தும், நோபல் பரிசு பெற்ற இந்திய விஞ்ஞானி சர். சி.வி. ராமன் மற்றும் அவர் கண்டுபிடித்த ராமன் ஒளி விளைவு குறித்தும் விளக்கப் படங்களுடன் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
மாணவர்கள், வரும் காலத்தில், சிறந்த விஞ்ஞானிகளாக வரவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில், ஏழாம் வகுப்பு மாணவர்கள் தாங்கள் உருவாக்கியிருந்த அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தினர். குறிப்பாக, கோள்களின் இயக்கம், லேசர் ஒளி செயல்பாடு, தானியங்கி வாகனத்தின் மாதிரி இயக்கம், கலங்கரை விளக்கத்தின் மாதிரி, ராக்கெட் மாதிரி, ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டன.
மாணவர்கள் தாங்கள் காட்சிப்படுத்திய செயல்திட்டங்களின் விளக்கங்களை விரிவாக எடுத்துக் கூறினர். அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. ஆசிரியர் ஐசக் சந்தோஷ் பிரபு நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் ஜென்னிங்ஸ் காமராஜ், ஆசிரியை சோபியா பொன்ஸ், ஆசிரியர் அலெக்ஸன் கிறிஸ்டோபர், தேசிய மாணவர் படை அலுவலர் சுஜித் செல்வ சுந்தர், ஆசிரியர் பரத் ஆகியோர் செய்திருந்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக