மார்ச் 31, ஸ்ரீவைகுண்டத்தைச் சுற்றி உள்ள நவதிருப்பதிகோவில்களில் திருப்புளியங்குடி 3 வது திருப்பதி ஆகும். ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பிரம்மோற்சவம் நடைபெறும்.
மார்ச் 22 ந்தேதி கொடியேற்றம் நடந்தது. முன்தினம் 9 ந் திருவிழாவை முன்னிட்டு தெப்போற்சவம் நடந்தது. காலை 6 மணிக்கு விஸ்வரூபம். 7 மணிக்கு நித்தியல். 7.30 மணிக்கு உற்சவர் வீதி உலா நடந்தது. காலை 11.30 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம். 12 மணிக்கு தீபாராதனை. நாலாயிர திவ்ய பிரபந்தங்கள்
அத்யாபகர்கள் சீனிவாசன். ஸ்ரீ வேங்கட கிருஷ்ணன். ஆதிநாதன். சடகோபன். பெரிய திருவடி. ஆகியோர் பிரபந்தங்கள் சேவித்தனர். சாத்துமுறை. தீர்த்தம். சடாரி. பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு சாயரட்சை. பின்னர் உற்சவர் வாகன குறட்டிற்கு எழுந்தருளினார்.
அர்ச்சகர் ரமேஷ். கோபாலகிருஷ்ணன் தோளுக்கினியானில் காய்சினி வேந்தன் தாயார் களுடன் அலங்காரம் செய்தனர். இரவு 8.30 மணிக்கு உற்சவர் காய்சினி வேந்தன் தாயார் களுடன் தெப்பக்குளம் எழுந்தருளி 12 சுற்றுக்கள் சுற்றி பக்தர்களுக்கு காட்சி தந்தார். இன்று தீர்த்தவாரி நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில் ஸ்தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி. சீனிவாசன். திருவேங்கடத்தான். கண்ணன். ஸ்ரீ கிருஷ்ணன். அறங்காவலர் குழுத் தலைவர் அருணாதேவி கொம்பையா. அறங்காவலர்கள் மாரியம்மாள் சண்முகசுந்தரம் முருகன். முத்து கிருஷ்ணன். பாலகிருஷ்ணன். செயல் அலுவலர் கோவல மணிகண்டன் ஆய்வாளர் முருகன் காவல் துறை துணை கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் உட்பட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை அர்ச்சகர்கள் . கோபாலகிருஷ்ணன். சௌந்தரராஜன். காய்சினிவேந்தன் ஆகியோர் செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக