தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் மாவட்ட காவல்துறை சார்பாக சைபர் விழிப்புணர்வு எச்சரிக்கை. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வெள்ளி, 14 மார்ச், 2025

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் மாவட்ட காவல்துறை சார்பாக சைபர் விழிப்புணர்வு எச்சரிக்கை.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் மாவட்ட காவல்துறை சார்பாக சைபர் விழிப்புணர்வு எச்சரிக்கை.

தற்போது பெரிய நிறுவனங்களின் முதலாளிகள் மற்றும் நிறுவனங்களில் உயர் பதவியில் இருக்கும் நபர்களின் புகைப்படங்களை வைத்து போலியாக வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் மின்னஞ்சல் கணக்குகளை உருவாக்கி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களை தொடர்பு கொண்டு நிறுவனங்களின் வங்கி கணக்கு விவரங்கள் உட்பட நிறுவனம் சார்ந்த அனைத்து விவரங்களையும் கேட்டு தெரிந்து கொண்டு வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை மோசடி செய்யும் புதிய யுக்தி தற்போது சைபர் குற்றவாளிகளால் அரங்கேற்றப்பட்டு வருகிறது.

எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெரிய நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் நபர்களின் நலன் கருதி மேற்படி சைபர் மோசடி குற்றங்களில் இருந்து தற்காத்துக் கொண்டு விழிப்புடன் இருக்குமாறு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சைபர் மோசடி குறித்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களும் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் நபர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியும், சைபர் குற்ற உதவி எண் 1930 மற்றும் cybercrime.gov.in என்ற சைபர் குற்ற இணையதளம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு பொதுமக்கள் நலன் கருதி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை  தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad