எமரால்டு அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு திட்டம் இனிய துவக்கம்
நீலகிரி மாவட்டம் உதகைக்கு உட்பட்ட எமரால்டு பகுதியில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையானது துவங்கி மூன்று வருடங்கள் ஆன நிலையில் இன்றைய தினம் 13.03.2025 வியாழக்கிழமை அன்று நமது நீலகிரி மாவட்ட கோட்டாட்சியர் திரு சதீஷ் மற்றும் தாசில்தார் மகேஸ்வரி அவர்கள் நேரடியாக மருத்துவமனை வளாகம் வந்து நேர் பார்வை கொண்டு அங்கு தங்கி இருக்கும் ஆண் பெண் மற்றும் குழந்தைகள் என 30-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு இன்று முதல் காலை மதியம் மற்றும் இரவு என மூன்று வேலைகளுக்கும் உணவளிக்கப்படும் என்று கூறி இன்றைய தினத்தில் இருந்து குத்து விளக்கேற்றி நோயாளிகளுக்கு உணவளித்து துவக்கி வைத்தார். இவர்களுடன் மருத்துவர் N.N ராஜசேகரன் மருத்துவர் பேனீஸ் மற்றும் மருத்துவர் நிவேதா உடன் இருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக