தவக்காலம் தொடக்கம், திருத்தல அதிபர் சில்வெஸ்டர் தலைமையில் சிறப்பு வழிபாடு.
கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் நாடு முழுவதும் இன்று முதல் தொடங்கியது. இதன் ஒரு பகுதியான தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி வழிகாட்டுதலின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் தவக்காலத்தில் தொடக்க நாளான இன்று சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது.
இதனையொட்டி திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை இயேசுவின் திரு இருதய அற்புத கெபி திருத்தலத்தில் காலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி திருத்தல அதிபர் சில்வெஸ்டர் தலைமையில் நடைபெற்றது. இதில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்கால திருநாட்களை கடைப்பிடிப்பதை குறித்து திரளாக திரண்டு வந்த கிறிஸ்தவர்கள் முன்னிலையில் எடுத்துரைத்தார்.
பின்னர் திருப்பலியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நெற்றியில் சாம்பல் பூசி தவக்காலத்தை தொடங்கினர். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். இதனை தொடர்ந்து சிலுவை பாதை வழிபாடு நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் சில்வெஸ்டர், உதவி பங்குத்தந்தை ஜோதிமணி திருத்தல நிதிகுழுவினர் செய்திருந்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக