நேரு யுவகேந்திரா நீலகிரி மாவட்டம் சார்பில், உதகை அரசினர் தலைமை மருத்துவக் கல்லூரி செவிலியர் பயிற்சி மையத்தில் உலக காச நோய் விழிப்புணர்வு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்வில் கல்லூரி முதல்வர் முத்துசாமி தலைமை தாங்கினார், நேரு யுவகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித் குமார் முன்னிலை வகித்தார் சிறப்பு அழைப்பாளர்களாக இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் உறுப்பினர் பிலிப்ராஜ் ரவி நீலகிரி மாவட்ட சமூக தன்னார்வலர்கள் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் சுரேஷ் ரமணா ஆகியோர் கலந்து கொண்டனர். பேச்சுப்போட்டி மற்றும் ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக