குடியாத்தம், உள்ளி ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு.
குடியாத்தம் , மார்ச் 30 -
தனிநபர் பிரச்சினை குறித்து, அரசு விதிமுறைப்படி கிராமசபை கூட்டம் நடைபெறவில்லை என அவ்வூராட்சி பொதுமக்கள் குற்றச்சாட்டு
வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா, உள்ளி ஊராட்சி, உலக தண்ணீர் தினத் தை முன்னிட்டு உள்ளி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மார்ச் 22 உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு அனைத்து கிராம ஊராட்சி களிலும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் உள்ள 247 கிராம ஊராட்சியிலும் 29-03-2025 சனிககிழமை கிராம சபை கூட்டம் நடைபெற்றது. உள்ளி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி அலுவலகம் அருகே நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்தில் தனி நபர் ஒருவர் சில நபர்க ளை ஏவி விட்டு கிராம சபா கூட்டத்தை அலைக்கழித்தனர் இதனால் கிராம சபை கூட்டத்தில் நேரம் கால தாமதம் ஏற்பட்டு சுமார் ஒரு மணி நேரம் இந்த கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மக்களுக்கு அடிப்படை தேவைகள் குடிநீர், தெரு சாலைகளில் மின்விளக்கு வசதி, கொசு மருந்து தெளிப்பதில்லை அதற்கு உண்டான நடவடிக்கை, ஜல்ஜீவன் குடிநீர் வசதி பெறாதவர்களுக்கு பெற வசதி வாய்ப்பு ஏற்பாடுகள், வீடு இல்லாதவர் களுக்கு வீடு வசதி ஏற்பாடு, வீடு நிலம் இல்லாமல் வாடகையில் வசிப்பவர் களுக்கு இலவச வீட்டு மனை பட்டா, ஆகிய பல்வேறு அடிப்படை தேவைகள் குறித்த முக்கிய தீர்மானங்கள் குறித்து எதுவும் நடைமுறைப்படுத்தவில்லை, ஏனென்றால் தனி நபர் ஒருவர் ஏவி விட்ட நபர்கள் மூலம் முக்கிய தீர்மானங்கள் நிறைவே படவில்லை இதை ஊராட்சி மன்ற தலைவர் கேட்கும் போது அவர் அடியாட்களோடு வந்து என்னை மிரட்டு கிறார் என்று தகவல் தெரிவித்தனர்
இதனை மாவட்ட ஆட்சியர் அவர்கள் உடனடியாக அந்த தனிநபர் யார் என்று விசாரணை செய்து இதன் பேரில் அவர்மீது மேல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவ்வூராட்சி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக