மகளிர் தினத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் காவல்துறை மற்றும் இன்னர் வீல் கிளப் ஆப் ஒட்டகமண்ட் இணைந்து பெண்களுக்கான மாரத்தான் போட்டி நடத்தினார்கள். இன்று காலை HADP கிரவுண்டில் இருந்து பிங்கர் போஸ்ட் பகுதியில் அமைந்திருக்கும் HADP அலுவலகம் சென்று திரும்பி மீண்டும் HADP கிரவுண்ட் வரை மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவிகள், காவல்துறையினர் கலந்து கொண்டனர். அவர்களுடன் இன்னர் வீல் கிளப் ஆப் ஒட்டகமெண்ட் குழுவில் இருக்கும் அனைத்து பெண்களும் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும் மற்றும் காவல்துறையினருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட புகைப்பட கலைஞர் என் வினோத் குமார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக