குடியாத்தம் அருகே தேனீக்கள் கொட்டி வெல்டிங் தொழிலாளி உயிரிழப்பு
குடியாத்தம் , மார்ச் 9 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சின்ன பரவகல் கிராமத்தில் ஏகாம்பரம் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் கன்னி கோவில் குலதெய்வம் சாமி கும்பிடுவதற்காக பரவகல் கிராமத்தில் வசித்து வரும் வனஜா (வயது 57 )
க/பெ ராமலிங்கம் ராமலிங்கம் (வயது63 )
த/ பெ பச்சையப்ப உடையார் அஞ்சலி (வயது 59) க/பெ ஏகநாதன்
மற்றும் பிரவீன் ரஞ்சித் தீக்ஷிதா
பூஜ்ஜீத் மஞ்சுளா நாகேஸ்வரி காவியா ஆனந்தன் ஆகியோர் குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடு செய்ய மேற்படி ராஜா குப்பம் கிராம எல்லையில் உள்ள கோயிலில் பொங்கலிட்டு போது ஏற்பட்ட புகையின் காரணமாக மரத்திலிருந்து தேனீக்கள் கடித்து மேற்படி நபர்களுக்கு காயம் ஏற்பட்டு 108 அவசர ஊர்தி மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் செந்தில் குமார் (வயது 40) த/ பெ பால மூர்த்தி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் மேலும் விசாலாட்சி வனஜா ராமலிங்கம் அஞ்சலி ஏகநாதன் ஆகியோர் மேல் சிகிச்சைக் காக சிஎம்சி மருத்துவமனைக்கு சென்றுள்ளனர் மற்ற நபர்கள் சிகிச்சை பெற்று வீட்டிற்கு சென்றனர் இதனால் அப்பகுதியில் பரிதாப நிலை ஏற்பட்டது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக