அரசு ஆதிதிராவிட நல உயர் நிலைப் பள்ளியில் இரத்த தானம் குறித்து விழிப்புணர்வு பேரணி!
அணைக்கட்டு ,மார்ச் 7 -
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம் மகமதுபுரம் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி சார்பில் இரத்ததானம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை கே கலாவதி தலைமை தாங்கினார் துணை தலைமை ஆசிரியர் பி பபிதா முன்னிலை வகித்தார் கிராமப்புற தோட்டக்கலை அனுபவ பயிற்சி திட்டத்தின் கீழ் குடியாத்தம் ஒன்றியத்துக்கு வந்துள்ள ராணிப்பேட்டை மாவட்டம் கலவை ஆதிபராசக்தி தோட்டக்கலை கல்லூரி 4 ஆம் ஆண்டு மாணவர்கள் த.நந்தினி, ர.ப. நிவாசினி, கே.நிவேதா, ந. பவித்ரா, ப.பூவிதா, ச.பூவிதா மற்றும் தே. பிரசன்னாதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டு உதிரம் கொடுப்போம்
உயிர் காப்போம் என்ற தலைப்பில் மாணவ மாணவிகளுக்கு கருத்துகளை தெரிவித்தனர். தொடர்ந்து ரத்த தானம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் வாசக அட்டைகள் ஏந்திய படி மாணவ மாணவிகளின் ஊர்வலம் நடந்தது ஆசிரியர்கள் ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மை குழுவினர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக