ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம். - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

சனி, 1 மார்ச், 2025

ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்.

முதல்வர் மு. க. ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம் வழங்கினார்.

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் பிறந்தநாள் விழா தூத்துக்குடி தெற்கு மாவட்ட பகுதிகளில் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான ராதாகிருஷ்ணன் ஆணைப்படி திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது. 

இதனை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம் வழங்கினார். இதேபோல் வீரபாண்டியபட்டினம் கருணாலயா முதியோர் இல்லத்தில் மாவட்ட சமூக வலைதள பொறுப்பாளர் நம்பிராஜன் ஏற்பாட்டில் காலை உணவு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் செந்தூர் ஒன்றிய திமுக செயலாளர் செங்குழி ஏபி ரமேஷ், நகர திமுக செயலாளர் வாள் ஆர் சுடலை, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பிரபின், மாவட்ட சமூக வலைதள பொறுப்பாளர் நம்பிராஜன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் செந்தில்குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மணல்மேடு சுதாகர், நகர்மன்ற உறுப்பினர் ரேவதி, அயலக அணி டேனியல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழர் குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad