விளையாட்டு விழா ( Annual sports meet 2024 -2025).
எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரியின் விளையாட்டு விழா 21-03-2025 அன்று கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்ட இவ்விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் கல்லூரி முதல்வர் முனைவர் கே. சுஜாதா அவர்கள் வரவேற்று பேசினார். கல்லூரி மாணவிகளின் படை அணிவகுப்பிற்குப் பிறகு கல்லூரி விளையாட்டு செயலாளர் செல்வி. நவிதா மற்றும் நான்கு அணிகளின் தலைவிகளால் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது. மாணவிகள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். முனைவர். அகிலா, உடற்கல்வித்துறை இயக்குநர் அவர்கள் ஆண்டறிக்கை வாசித்தார்.
இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக திருமதி. ஆர். ஷீலாதேவி, உடற்கல்வி ஆசிரியர் (ஓய்வு),ஸ்ரீ சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, உதகை அவர்கள் கலந்து கொண்டு விழா சிறப்புரையாற்றினார். "உடற்கல்வியின் முக்கியத்துவத்தையும் இன்றைய வாழ்வியலில் உடற்பயிற்சியின் அவசியத்தையும் எடுத்துரைத்தார்". பிறகு பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தார். சிலம்பம் மற்றும் பல்வேறு நிகழ்வுகளுக்குப் பிறகு செல்வி. ஆயிஷா சுஹானி,(மூன்றாம் ஆண்டு வணிக பயன்பாடு) நன்றியுரை வாசித்தார். தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட புகைப்பட கலைஞர் என் வினோத் குமார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக