மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற லாரி டிரைவருக்கு 8½ ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ஊமாரெட்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் தனபால் (வயது 42). லாரி டிரைவரான இவர் கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி பொது இடத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த திருமணம் ஆகி கணவரைப் பிரிந்து வாழும் காது கேட்காத மற்றும் வாய் பேச முடியாத 37 வயது மாற்றுத்திறனாளி பெண்ணைத் தாக்கி பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். மேலும் அந்தப் பெண்ணுக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில், போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தனபாலைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில், வழக்கு விசாரணையை முடித்து, மாவட்ட முதன்மை நீதிபதி முருகேசன் நேற்று தீர்ப்பளித்தார். அதில், குற்றவாளி தனபாலுக்கு மாற்றுத்திறனாளி பெண்ணைப் பலாத்காரம் செய்ய முயன்றதற்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், அந்தப் பெண்ணைத் தாக்கியதற்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும், காயங்கள் ஏற்படுத்தியதற்கு 6 மாத சிறைத் தண்டனையும் என மொத்தம் 82 ஆண்டு சிறைத் தண்டனையும், 3 பிரிவுகளிலும் அபராதத் தொகையாக ரூ.2,500 செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக