தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா மாநிலம் முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட பகுதிகளில் மாவட்ட செயலாளரும் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆணைப்படி கட்சி நிர்வாகிகள் நலத்திட்ட உதவி வழங்கி முதல்வர் பிறந்த நாளை கொண்டாடினர்.
உடன்குடி அருகே வெள்ளாளன்விளையில் நயினார்புரம் தொழிலதிபர் பெப்சி பாலமுரளி, சிறுபான்மையினர் பிரிவு மாவட்ட அமைப்பாளர் ராஜேஷ் ஆகியோர் ஏற்பாட்டில் முதல்வரின் பிறந்தநாள் விழா வெள்ளாளன்விளையில் கொண்டாடப்பட்டது.
இதில் உடன்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் இளங்கோ தலைமையில் தமிழக முதல்வராக மு க ஸ்டாலின் மீண்டும் வெற்றி பெற பாடுபடுவது என உறுதிமொழி ஏற்கப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி மதன்ராஜ்
ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மனோஜ் வெள்ளாளன்விளை கிளைச் செயலாளர் ஞான தாஸ் சியோன் நகர் கிளைச் செயலாளர் கிதியோன் சியோன்நகர் ஊர் தலைவர் சற்குணராஜ் மற்றும் வெள்ளாளன்விளை சியோன் நகர் பகுதி திமுக பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக