தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் அவர்களின் 72 வயது பிறந்தநாள் விழா திமுக சார்பில் கொண்டாட்டம்! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 3 மார்ச், 2025

தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் அவர்களின் 72 வயது பிறந்தநாள் விழா திமுக சார்பில் கொண்டாட்டம்!


குடியாத்தம், மார்ச் 3

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த வளத்தூர் கிராமத்தில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களின் 72 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது இவ்விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எக்ஸ் . முன்னாள் கூட்டுறவுசக்கரை ஆலை இயக்குனர் இ.சேகரன் தலைமையில் கிழக்கு ஒன்றிய செயலாளர் வி. பிரதீஷ் முன்னிலையில் தெற்கு ஒன்றிய செயலாளர் அன்பரசன், ஷாஜகான், பொருளாளர் சேகர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பா, ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் செல்வம் புனிதா மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும் இந்த பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டனர் 

மேலும் பெண்களுக்கு சேலை,மாணவ மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம் ,பேனா பென்சில் மற்றும் இனிப்புகள் வழங்கி பிறந்த நாளை மிகச் சிறப்பாக கொண்டாடினார்கள் இவ்விழாவில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கினார்கள்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad