கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா பக்தர்கள் 72 விசை படகுகள் 22 நாட்டு படகுகள் மூலம் வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் இன்று (14.03.2025)கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு செல்லும் பக்தர்களை வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் கலோன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் முன்னிலையில் பக்தர்கள் செல்லும் படகுகளை கொடியசைத்து வழியனுப்பி வைத்தனர். கச்சதீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்றும் நாளையும் நடைபெறுகிறது இந்த விழாவில் பங்கேற்பதற்காக இந்திய அரசின் அனுமதியுடன் தமிழ்நாடு அரசு வழிகாட்டுதலின்படி, பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 3 ஆயிரத்து 424 பேர் விண்ணப்பித்திருந்தனர் இன்று காலை முதல் 78 விசைப்படகுகள் மூலம் மற்றும் 22 நாட்டுப் படகுகளில் பக்தர்கள் செல்வதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது பயணம் செல்லும் படகுகள் அனைத்தும் முறையாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பாக இந்திய கடற்படை, கடலோரப் பாதுகாப்பு குழுமம், சுங்கத்துறை, இமிகிரேஷன், காவல்துறை, மீன்வளத்துறை, வருவாய்த்துறை, உள்ளிட்ட அலுவலர்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் மேலும் கச்சத்தீவு சென்று வரும் அனைவருக்கும் தேவையான அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகத்தால் செய்து தரப்பட்டுள்ளன அனைவருக்கும் லைப் ஜாக்கெட் வழங்கப்பட்டுள்ளது, கடலோர காவல் படை மற்றும் காவல்துறை மூலம் அனைவரும் கண்காணிக்கப்பட்டு கச்சத்தீவு நிகழ்ச்சி முடிந்து திரும்பி வரும்வரை உரிய வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன மேலும் கச்சத்தீவு சென்று வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைத்திட ஏதுவாக ஏற்கனவே அனைத்து துறை அலுவலர்களுடன் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இது தவிர மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு பயணிகளுடன் சென்று அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது ஒவ்வொரு படகுகளும் தேவையான மருந்து மாத்திரை மருத்துவ துறையின் மூலம் வழங்கப்பட்டுள்ளது. எனவே கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு சென்று வரும் பக்தர்கள் அரசு வழிகாட்டுதலை பின்பற்றி திருவிழாவில் பங்கேற்று வரவேண்டும் எனவும் பயணம் மேற்கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் கலோன் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கடலோர காவல் படை அதிகாரி விநாயக் குமார், துணை ஆணையர் சுங்கம் பிரகாஷ் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜ மனோகரன், மீன்வளத்துறை துணை இயக்குனர்கள் பிரேமாவதி, கோபிநாத் உதவி இயக்குனர்கள் ஜெயக்குமார், சிவக்குமார் ராமேஸ்வரம் நகராட்சி ஆணையர் கண்ணன் ராமேஸ்வரம் நகராட்சி பொறியாளர் பாண்டீஸ்வரி வட்டாட்சியர் ஜாபர் மற்றும் விழா குழுவினர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக