பாம்பன் கடல் ரயில் பாலம் ஏப்ரல் 6 ந் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.
மண்டபம் பாம்பன் புதிய ரயில் பாலம் ஏப்ரல் 6ம் தேதி திறந்து வைக்கபடுகிறது.
பாம்பன் புதிய ரயில் பாலம் ஏப்ரல் 6,ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ரயில் பாலத்தை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார். இராமேஸ்வரம். பாம்பன் கடல்பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு ரயில் பாலத்தின் பணிகள் முழுமையாக முடிவடைந்த நிலையில் கடந்த மாதம் திறக்க இருந்தது பல்வேறு காரணமாக தேதி தள்ளி போனது நிலையில் வரும் ஏப்ரல் 6,ம் தேதி திறந்து வைக்க உள்ளார். இத் திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.இந்த கடல் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.இதில் மாநில ஆளுநர்,ரயில்வே அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொள்ள உள்ளனர். ஏப்ரல் 6 ம் தேதி முதல் தாம்பரம் , ராமேஸ்வரம் இடையிலான தினசரி புதிய ரயில் போக்குவரத்து துவங்கபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இராமேஸ்வரம் கோயமுத்தூர் வரையில் தினசரி இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக நிறுத்தி வைக்கபட்டு நிலையில் தற்போது வாரம் ஒரு முறை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது . மற்ற நாட்களில் மதுரை வரையில் மட்டும் இயக்கப்படுன்கிறது இதை மேலும் இராமேஸ்வரம் வரையில் நீடிக்க வேண்டும் எனவும் இராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம் போன்ற பகுதியில் வர்த்தகம் வளர்ச்சி பெற இராமேஸ்வரம் வரையில் மீண்டும் கோவை ரயில் இயக்கப்பட வேண்டும் என மீனவர்கள், வர்த்தக சங்கம் மற்றும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என அனைவரும் கோரிக்கை வைக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக